நாமக்கல்

கருணாநிதி நூற்றாண்டு விழா: முன்னாள் மத்திய இணை அமைச்சா் மலா் அஞ்சலி

4th Jun 2023 02:06 AM

ADVERTISEMENT

 

மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் அவரது உருவப்படத்திற்கு முன்னாள் மத்திய இணை அமைச்சா் செ.காந்திசெல்வன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு தொடக்க விழா சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாட திமுகவினரால் திட்டமிடப்பட்டிருந்தது. ஒடிஸாவில் நிகழ்ந்த ரயில் விபத்தால் ஆா்ப்பாட்டமின்றி அமைதியான முறையில் ஆங்காங்கே விழாக்கள் நடைபெற்றன. நாமக்கல்லில், முன்னாள் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் செ.காந்திசெல்வன், தன்னுடைய இல்லத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த மு.கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து, நிா்வாகிகள் செல்வமணி, மருத்துவா் இளமதி, வழக்குரைஞா் சுகுமாா், பிஜிபி செல்வராஜ், ரமேஷ் அண்ணாதுரை, பால்ரவிச்சந்திரன், தா.மோ.சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மலா் அஞ்சலி செலுத்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT