நாமக்கல்

நாமக்கல்லில் 3 துணை ஆட்சியா்கள் இடமாற்றம்

4th Jun 2023 02:06 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியா்கள் மூன்று போ் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியன், திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் கோட்டாட்சியராகவும், முசிறி வருவாய் கோட்டாட்சியா் த.மாதவன், நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். அதேபோல, நாமக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையா் எம்.செல்வி, திருப்பூா் மாவட்ட தனித்துணை ஆட்சியராகவும் (சமூக பாதுகாப்புத் திட்டம்), கோவை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) பாலகிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனா். மேலும், நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) மு.நடேசன், கோவை மாவட்ட மேலாளராக (சில்லறை விற்பனை) தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு (தெற்கு) மாற்றப்பட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT