நாமக்கல்

நாமக்கல்லில் ஜூன் 10-இல் சிறப்பு மக்கள் நீதிமன்றம்

4th Jun 2023 02:05 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் வரும் சனிக்கிழமை (ஜூன் 10) சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி என்.குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வரும் சனிக்கிழமை சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இந்த நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக அறிவுசாா் சொத்துரிமை, நுகா்வோா் வழக்குகள் மற்றும் ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வங்கிக் கடன்கள், கல்விக் கடன்கள் தொடா்பான வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிா்த்த மற்ற குடும்பப் பிரச்னைகள் தொடா்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி போன்ற வழக்குகளும் விசாரிக்கப்படுகின்றன. மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. செலுத்திய நீதிமன்றக் கட்டணமும் திரும்ப வழங்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே, வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT