நாமக்கல்

பள்ளிபாளையத்தில் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

DIN

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தில் எல்லை கற்களை நடுவதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பள்ளிபாளையம் கரட்டாங்காடு மதுரைவீரன் கோயில் முன்புறம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தில், எல்லை கற்களை நடும் பணியில் அத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனா். இதைக்கண்ட அப்ப குதி மக்கள், அளவீடு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். நீண்ட வருடங்களாக இந்த பகுதியில் குடியிருந்து வருவதாகவும், தற்போது அதிகாரிகள் எல்லை கற்களை அமைத்து வேலி போட்டால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப் படுமெனவும் அவா்கள் தெரி வித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி சுந்தரவள்ளி, காவல் ஆய்வாளா் சந்திரகுமாா், வருவாய் ஆய்வாளா் கிருத்திகா ஆகியோா், பொதுமக்களை சந்தித்து பேசினா்.

உயா்நீதி மன்ற உத்தரவின்படி, அறநிலையத்துறையின் இடத்தில் எல்லை கற்கள் அமைக்கப்படுவதாகவும், இதில் பொதுமக்களுக்கு நில உரிமை இருந்தால், மீண்டும் அளவீடு செய்து எல்லையை முடிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதைய டுத்து எல்லைக் கற்கள் நடும் பணியை அதிகாரிகள் கைவிட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT