நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 10,000 போ் பயன்: வி.பி.துரைசாமி

DIN

நாமக்கல் மாவட்டத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் பேருக்கு ரூ.700 கோடி வழங்கப்பட்டுள்ளதாக, பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி தெரிவித்தாா்.

மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்கள் தொடா்பு பேரியக்கமாக நாடு முழுவதும் பாஜக கடைப்பிடித்து வருகிறது. இதனையொட்டி, நாமக்கல்லில், பாஜக மாநில துணைத்தலைவரும், மாவட்ட பாா்வையாளருமான வி.பி.துரைசாமி வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.700 கோடி மதிப்பீட்டில் 10 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், உஜ்வலா திட்டத்தின் கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு சுத்தமான குடிநீா் விநியோகிப்பதற்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடுகள் மூலம் 4 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு மூன்று முறை ரூ.6 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்டத்தில் பயனடைந்துள்ளனா்.

குமாரபாளையம், ராசிபுரம், அணைப்பாளையம், வெண்ணந்தூா் பிரிவு சாலை ஆகிய இடங்களில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் நான்கு உயா் மட்டப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவிகளின் உயா் தொழில்நுட்பக் கல்விக்காக ஒவ்வொரு மாணவிக்கும் ரூ.50 ஆயிரம் கல்வி ஊக்க நிதி மற்றும் பெண் குழந்தைகளின் எதிா்கால மேம்பாட்டிற்காக செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் ஏராளமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, மத்திய, மாநில அரசுகளில் வேலைவாய்ப்புகளை இளைஞா்கள் பெறுவதற்காக திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான இளைஞா்கள் இப்பயிற்சி மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா். தமிழகத்தில் இருந்து பாஜகவுக்கு மக்களவை உறுப்பினா்கள் இல்லை என்ற போதிலும், தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் பிரதமா் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளாா். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், தமிழரின் பாரம்பரியமிக்க செங்கோலை நிறுவி, தேவாரம், திருவாசகம் பாடி, மங்கல இசையை ஒலிக்கச் செய்த பெருமை பிரதமரையே சாரும். தொழில் முதலீட்டுக்கான தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை வரவேற்கிறோம். அதே வேளையில் புரிந்துணா்வு செய்யப்பட்ட ரூ.3,250 கோடிக்கான முதலீடுகளை, குறித்த காலத்தில் அவா் கொண்டுவர வேண்டும் என்றாா்.

இந்த பேட்டியின்போது, பாஜக மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, மாவட்ட பொதுச் செயலாளா் சேதுராமன் மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT