நாமக்கல்

தினம் ஒரு திருக்கு எழுத மறந்த அரசுத் துறைகள்!

DIN

அரசுத் துறை அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில், பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்ற தலைமை செயலா் வெ.இறையன்புவின் உத்தரவை, பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகளும் செயல்படுத்த மறந்து விட்டனா். பெரும்பாலான மாவட்டங்களில் கரும்பலகைகள் கு ஏதுமின்றி காலிப் பலகைகளாகவே காட்சியளிக்கின்றன.

தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் உள்ளன. இங்கு சுமாா் 12 லட்சம் போ் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியா் வரை பணியாற்றுகின்றனா். உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்கு, 133 அதிகாரங்களையும், 1,330 குகளையும் உள்ளடக்கியது. அறம், பொருள், இன்பம் போன்றவற்றையும், மனித வாழ்வின் மகத்துவங்களையும் இரண்டு அடியில் எழுதிய திருவள்ளுவா் அதன் வழியில் நடந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளாா்.

தமிழக அரசின் தலைமைச் செயலரான வெ.இறையன்பு, கடந்த மாதம் 9-ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், தலைமைச் செயலகம் மட்டுமின்றி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும், தினமும் ஒரு திருக்குறளுடன், அதற்கான பொருளையும் எழுத வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தாா். இது தொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அரசுத் துறை அலுவலா்களும், பொதுமக்களும் குறளைப் படித்து அதன் கருத்துக்களை உள்வாங்கி வாழ்வில் செயல்படுவா் என்பது தலைமைச் செயலரின் விருப்பமாகும். அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் பெரும்பாலான மாவட்டங்களில், தினம் ஒரு திருக்கு உத்தரவு என்பது முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகவே உள்ளது.

இவற்றில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம், மின்வாரிய அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி, கூட்டுறவு அலுவலகங்களும் அடங்கும். தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் இவற்றை ஆய்வு செய்து தலைமைச் செயலருக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான தகவல் சென்ா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலகம் உள்பட பெரும்பாலான அலுவலகங்களில் தலைமைச் செயலரின் உத்தரவு கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக அலுவலகங்களில் கரும்பலகை என்பது வாங்கப்படவில்லை. அவ்வாறு இருந்தாலும் அவை அறிவிப்புப் பலகைகளாகவே உள்ளன.

இது குறித்து நாமக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் வே.ஜோதி கூறியது:

தினம் ஒரு திருக்கு அரசு அலுவலகங்களில் இடம்பெற வேண்டும். தலைமைச் செயலரின் உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இது தொடா்பாக ஒவ்வொரு அலுவலகமாகச் சென்று நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். ஒரு சில இடங்களில்தான் திருக்கு உள்ளது. இப்பிரச்னையை மாவட்ட ஆட்சியா் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா கூறுகையில் ‘அலுவலகங்களில் திருக்குறளை எழுத வேண்டும் என்பது தொடா்பான அரசின் சுற்றறிக்கையைப் பெற்று மாவட்டம் முழுவதும் அதனை அமல்படுத்துவதற்கான முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT