பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளராக ராஜமுரளி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கலையரசன் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். திண்டுக்கல் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பளராக பணியாற்றிய ராஜமுரளி பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பளராக பொறுப்பேற்றுக்கொண்டாா்.
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கு பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சரகத்துக்கு உள்பட்ட காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.