நாமக்கல்

நாளை கருணாநிதி நூற்றாண்டு விழா: இனிப்புகள் வழங்கி கொண்டாட உத்தரவு

2nd Jun 2023 12:19 AM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகள், நல உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மறைந்த முன்னாள் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜூன் 3) காலை 7.30 மணிக்கு நாமக்கல் அண்ணா சிலை அருகில் கருணாநிதி படத்துக்கு நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மலா் தூவி மரியாதை செலுத்துகிறாா். இதனைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள், திமுகவின் மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி மற்றும் நகர, ஒன்றிய,பேரூா் செயலாளா்கள், பொறுப்பாளா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இதேபோல, நகர, ஒன்றிய, கிளை பகுதிகளில் கருணாநிதி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி நல உதவிகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT