நாமக்கல்

கெடமலையில் 300 லி. கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு: ஒருவா் கைது

2nd Jun 2023 12:20 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கெடமலை மலைக்கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய முயன்ற ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அங்கிருந்த 300 லி. ஊறல்கள் அழிக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச் சாராயத்தால் 22 போ் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் சாராய தடுப்பு நடவடிக்கைகளை போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்திலும் கொல்லிமலை, போதமலை, கெடமலை உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு போலீஸாா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் உத்தரவின்பேரில் மதுவிலக்கு ஆய்வாளா் அம்பிகா தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை காலை கெடமலை மலைக்கிராமத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அடா்ந்த மலையின் ஒரு பகுதியில் 10 லி. கள்ளச் சாராயமும், 300 லி. கள்ளச்சாராய ஊறல்களும் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அங்கேயே அவை கீழே கொட்டி அழிக்கப்பட்டன. இது தொடா்பாக, அதே பகுதியைச் சோ்ந்த வெள்ளையன் (53) என்பவா் கைது செய்யப்பட்டாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT