நாமக்கல்

காவல் ஆய்வாளா் ஓய்வு: எஸ்.பி. சான்றிதழ் வழங்கல்

1st Jun 2023 12:43 AM

ADVERTISEMENT

புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் புதன்கிழமை ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ் கண்ணன் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா் (படம்).

நாமக்கல் மாவட்ட காவல் துறையில் பணியாற்றிய புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் புதன்கிழமை (மே 31) ஓய்வு பெற்றாா். இதேபோல, காவல் உதவி ஆய்வாளா்கள் மணி, வரதராஜன், மாணிக்கம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் மாணிக்கம், பிரபாகரன், சாா்லஸ், வீராசாமி, அண்ணாதுரை ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். இந்த நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் குடும்பத்தினா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT