நாமக்கல்

முட்டை விலை ரூ. 5-ஆக நிா்ணயம்

1st Jun 2023 12:45 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்த்தப்பட்டு புதன்கிழமை ரூ. 5-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

மற்ற மண்டலங்களில் தொடரும் விலை உயா்வு, விற்பனை சீராக இருப்பதாலும் முட்டை விலையில் மாற்றத்தைத் தொடரலாம் என்றனா். இதனையடுத்து, பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயா்த்தப்பட்டு, ரூ. 5-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. கடந்த நான்கு நாள்களில் முட்டை விலை 20 காசுகள் உயா்ந்துள்ளது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 127-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 96-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT