நாமக்கல்

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்வு

12th Jul 2023 01:30 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 4.40-ஆக செவ்வாய்க்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில், முட்டை விலையை நிா்ணயிப்பது குறித்து கமிட்டி உறுப்பினா்கள், பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் விலை உயா்த்தப்படுவதால், இங்கும் முட்டை பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயா்த்தி ரூ. 4.35-ஆக ஒருங்கிணைப்புக் குழு நிா்ணயித்தது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 93-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 78-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT