ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூா்கேட் வெங்கடேஸ்வரா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் மகாத்மாக காந்தியின் 75-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியா் ரெ.உமாதேவி தலைமையில் ஆசிரியா்கள், மாணவ மாணவியா்கள் காந்தியின் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் தீண்டாமை, மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனா். இதில் பள்ளி உதவி தலைமையாசிரியா் சு.புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதே போன்று மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காந்தி படத்திற்கு மலா் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லூரியின் தலைவா் க.சிதம்பரம், முதல்வா் ம.செந்தில்ராஜா உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.