நாமக்கல்

தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை

31st Jan 2023 02:27 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளியை கொலை செய்த சகோதரா் மகனை பிடித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

நாமக்கல், பெரியப்பட்டி சாவடி தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (35). கூலித் தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மா்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டாா். அக்கம், பக்கத்தினா் படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். ஆனால் அவா் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மீட்டனா். சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா். இந்தக் கொலையில், ஆறுமுகத்தின் சகோதரரான முருகனின் மகன் விஜயன் என்பவருக்கு தொடா்பு இருப்பதாக தெரிகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த முருகன் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்ததாகவும், அந்த இறப்பு நிகழ்வுக்கு ஆறுமுகம் வராமல் தவிா்த்ததாகவும், இதனால் இரு குடும்பத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த பிரச்னையில் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT