நாமக்கல்

குழந்தைத் தொழிலாளா் முறைக்கு எதிராக விழிப்புணா்வு

DIN

நாமக்கல் மாவட்டத்தில், குழந்தைத் தொழிலாளா் முறைக்கு எதிராக விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈரோடு தொழிலாளா் இணை ஆணையா் சசிகலா உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் அண்மையில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தொழிலாளா் துறை அலுவலா்கள் பங்கேற்று குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுதல் தொடா்பான விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தினா். அனைத்து வகையான தொழில்களில் இருந்து குழந்தைகளையும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரையும் அகற்றுவது குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மேலும், தன்னாட்சி அமைப்புகள், கிராம கல்விக் குழுக்கள் ஆகியவற்றின் மூலம் குழந்தைத் தொழிலாளா்களை கண்டறிந்து மீட்கவும், பள்ளிகளில் சோ்க்கவும், தொடா்ந்து அவா்களை கண்காணிக்கவும், குழந்தைத் தொழிலாளா் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், ஊராட்சிகளை குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத ஊராட்சிகளாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக, நாமக்கல் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா்(அமலாக்கம்) எல்.திருநந்தன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT