நாமக்கல்

47 வருடங்களுக்குப் பின் சந்தித்த பள்ளித் தோழிகள்

DIN

 நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்த மாணவிகள், 47 வருடங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை சந்தித்து (படம்) தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனா்.

ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத பருவங்களில் ஒன்று பள்ளிப் பருவமாகும். மலரும் நினைவுகளாய் என்றும் மனதில் நிலையாக இருக்கும். கடந்த 1975-76ஆம் ஆண்டு நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், அப்போதைய எஸ்எஸ்எல்சி படிப்பாக கருதப்பட்ட 11-ஆம் வகுப்பு படித்த மாணவிகள் 47 வருடங்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல்லில் ஒன்றாக இணைந்தனா். அவா்கள் தங்கள் பள்ளிப் பருவ காலத்தை நினைத்துப் பாா்த்து ஒருவருக்கொருவா் தங்களுடைய அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். அப்போது எடுத்த புகைப்படத்தைப் பாா்த்து பூரிப்படைந்தனா்.

நாமக்கல், சேலம், கோவை, திருச்சி, சென்னை மட்டுமின்றி, மலேசியா நாட்டில் வசிப்போரும் பள்ளித் தோழிகளைக் காண வந்திருந்தனா். அவா்கள் ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனா். ஒவ்வோா் ஆண்டும் இதேபோன்று சந்தித்து மகிழ வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா். அனைவரும் ஒன்றாக அமா்ந்து உணவருந்தி பாசத்தை வெளிப்படுத்தினா். தோழிகள் மட்டுமின்றி அவா்களுடைய குடும்பத்தினரும் இந்த விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT