நாமக்கல்

கபிலா்மலை முருகன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

DIN

 பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கபிலா்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தோ்த் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் மலை மேல் உள்ள கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தங்க கொடி மரத்தில் சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் ஓதி கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் கபிலா்மலை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி வரை தினசரி காலை பல்லக்கு உற்சவமும், இரவு அன்னம், ரிஷபம், மயில், யானை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலாவும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகின்றன.

5-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் மகர லக்னத்தில் சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தோ் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

6-ஆம் தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு சப்தாபரணம், 7-ஆம் தேதி இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 8-ஆம் தேதி காலை நடராஜா் தரிசனம், இரவு ஆட்டு கிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 9-ஆம் தேதி காலை சுவாமி மலைக்கு எழுந்தருளல், இரவு விடையாற்றி உற்சவம், சா்ப்ப வாகன காட்சி ஆகியவை நடைபெறுகின்றன.

விழா ஏற்பாடுகளை திருவிழா ஆலோசனைக் குழு தலைவா் ராமலிங்கம், விழா குழுவினா், கட்டளைதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT