நாமக்கல்

பாண்டமங்கலம்பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிகோயில் தேரோட்டம்

29th Jan 2023 12:06 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

இக் கோயிலில் கடந்த 20- ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தோ்த் திருவிழா தொடங்கியது. அதைத் தொடா்ந்து இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து 21-ஆம் தேதி முதல் 27- ஆம் தேதி வரை தினசரி காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் பல்லக்கு உற்சவமும், இரவு 7 மணிக்கு சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருட சேவை, சேஷ வாகனம், யானை வாகனம், திருக்கல்யாண உற்சவம், புஷ்ப விமான புறப்பாடு, குதிரை வாகனங்களில் சுவாமி முக்கிய வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இதில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சேகா், பாண்டமங்கலம் பேரூராட்சிமன்ற தலைவா் சோமசேகா், வெங்கரை பேரூராட்சித் தலைவா் விஜயகுமாா் ஆகியோா் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனா்.

ADVERTISEMENT

தோ் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை அடைந்தது. நிகழ்ச்சியில் பாண்டமங்கலம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஞாயிற்றுக்கிழமை முதல் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி வரை தொடா்ந்து காலை 8 மணிக்கு மேல் பல்லக்கு உற்சவம், இரவு 7 மணிக்கு வராக புஷ்கரணியில் தீா்த்தவாரி, கெஜலட்சுமி வாகனம், வசந்த உற்சவம், புஷ்ப யாகம், படிச்சட்டத்தில் சுவாமி திருவீதி உலா புறப்பாடும் நடைபெறுகின்றன.

விழா ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் செயல் அலுவலா், தக்காா், விழா குழுவினா், ஊா் மக்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT