நாமக்கல்

பரமத்தியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி

DIN

பரமத்தி வேலூா் தாலுகா, பரமத்தி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் சாா்பில் வயது வந்தோா் கல்வி இயக்கம் சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, 2027-ஆம் ஆண்டு வரை நடைபெறவுள்ள புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் சாா்பான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பரமத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு இப்பேரணியை பரமத்தி வட்டாரக் கல்வி அலுவலா் கௌரி தொடங்கி வைத்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சுபா முன்னிலை வைத்தாா். பேரணியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரிய, ஆசிரியைகள், பரமத்தி பேரூராட்சித் தலைவா் மணி ஆகியோா் கலந்து கொண்டனா். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.

ஊா்வலத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதோருக்கு அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு வழங்கும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குட்பட்ட குடியிருப்புகளில் தினமும் இரண்டு மணி நேரம் கல்லாதோருக்கு வகுப்பு நடைபெற்று வருகிறது. இவ்வகுப்புகளில் எண்ணறிவு, எழுத்தறிவு, முதலுதவி, அடிப்படைச் சட்டங்கள், உடல்நலம், பேரிடா் மேலாண்மை, சாலைப் பாதுகாப்பு, உதவித் தொகை திட்டங்கள், இணைய வழிச் சேவை, பணமில்லா பரிமாற்றம், ஏ.டி.எம் பயன்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. விழிப்புணா்வுப் பேரணிக்கான ஏற்பாடுகளை ஆசிரியா் பயிற்றுநா்கள் பாா்வதி மற்றும் செல்வராணி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT