நாமக்கல்

நாமக்கல்: விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு

DIN

நாமக்கல் மாவட்டத்தில், குடியரசு தினத்தையொட்டி விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஈரோடு தொழிலாளா் இணை ஆணையா் ஜி.சசிகலா உத்தரவின்பேரில், நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) எல்.திருநந்தன் தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் உதவி ஆய்வாரள்கள், குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தனா். இந்த ஆய்வின்போது தொழிலாளா்களுக்கு கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிா அல்லது பணியாளா்கள் பணிபுரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிா்வாகம் தெரிவித்து, அதற்குரிய படிவத்தை தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், 30 கடைகளில் ஆய்வு செய்ததில் 17 கடைகள், 51 உணவகங்களில் 37 உணவகங்கள், 7 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில், 6 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 88 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 60 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காதது தெரிய வந்தது. மேலும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணிநேரத்திற்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி அதன் நகலை சம்பந்தப்பட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறாமல் இருந்ததும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாள்கள்) சட்டத்தின்கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் எல்.திருநந்தன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT