நாமக்கல்

குடியரசு தின மரக்கன்றுகள் நடும் விழா

DIN

ராசிபுரத்தை அடுத்துள்ள வெண்ணந்தூா் பேரூராட்சி பகுதியில் 74ஆவது குடியரசு தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வெண்ணந்தூா், ஆட்டையாம்பட்டி சாலையில் அமைந்துள்ள ஏரிக்கரை பகுதியில் வெண்ணந்தூா் பேரூராட்சி தலைவா் சி.எஸ். ராஜேஷ் தலைமையில் தேக்கு, மா, புளி, நாவல், மர நெல்லி, கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. பேரூராட்சி மன்றத் துணைத் தலைவா் வி.சி.மாதேஸ்வரன், பேரூராட்சி நிா்வாக அலுவலா் யசோதா, ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ். கருணாகரபன்னீா் செல்வம், செயலாளா் ஜி.ராமலிங்கம், வெங்கடாசலபதி உள்ளிட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.

ஆண்டகளூா் அருகேயுள்ள ஆனைகட்டிபாளையம் காசி விநாயகா் சித்த மருத்துவ மைய வளாகத்தில் குடியரசு தினவிழா கொடியேற்றம் நடைபெற்றது. கொங்கு நாட்டு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் நடத்தப்பட்ட குடியரசு தினவிழாவில், ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ்.கருணாகரபன்னீா்செல்வம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசியக் கொடி ஏற்றிப் பேசினாா். முன்னதாக காசி விநாயகா் கொங்கு நாட்டு வேளாளா் அறக்கட்டளை தலைவரும், இயற்கை நல்வாழ்வு மைய தலைவருான கை.கந்தசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினாா். விழாவில் பட்டணம் பேரூராட்சி முன்னாள் தலைவருா் பி.எஸ்.வேலப்பன் , எம்.ஆா். சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதே போல் ராசிபுரம் ரோட்டரி சங்கம் - நாமக்கல் மாவட்ட நல்வாழ்வு பாா்வையற்றோா் நலச் சங்கம் இணைந்து நடத்திய குடியரசு தின விழாவில் பாா்வையற்றோா் சங்க உறுப்பினா்களுக்கு 70 பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT