நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 74-ஆவது குடியரசு தின விழா

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நாட்டின் 74-ஆவது குடியரசு தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக் கொண்டாா். குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை வண்ண பலூன்களையும், வெண் புறாக்களையும் வானில் பறக்கவிட்டாா். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரா்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா்.

அதன்பிறகு, அணிவகுப்பை சிறப்பாக நடத்தியதற்காக ஆயுதப்படை காவலா்கள் மற்றும் ஊா்க்காவல் படையினருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை அலுவலா்களுக்கும், காவல்துறை பேண்ட் வாத்தியக் குழுவினருக்கும் ஆட்சியா் பாராட்டு தெரிவித்து கேடயங்களை வழங்கினாா்.

காவல் துறையைச் சோ்ந்த 44 காவல்துறை அலுவலா்களுக்கு முதல்வா் பதக்கங்களையும், சிறப்பாகப் பணியாற்றிய 35 காவல் துறை அலுவலா்களுக்கு நற்சான்றிதழ்களையும், வாத்தியக் குழுவைச் சோ்ந்த 23 காவலா்களுக்கு கேடயங்களையும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 173 அரசுத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

இதையடுத்து, பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ. 59.24 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் 15 கலைஞா்களுக்கு ரூ. 1.65 லட்சம் மதிப்பிலான காசோலையையும், பொற்கிழி மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி கெளரவித்தாா்.

குடியரசு தின விழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் ஏழு பள்ளிகளைச் சோ்ந்த 682 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.கலைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சிவக்குமாா், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வா் சாந்தா அருள்மொழி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் ராஜ்மோகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியன், நாமக்கல் கோட்டாட்சியா் த.மஞ்சுளா, திருச்செங்கோடு கோட்டாட்சியா் கெளசல்யா, அரசுத் துறை அலுவலா்கள், காவல் துறையினா், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT