நாமக்கல்

உதயநிதி ஸ்டாலின் இன்று நாமக்கல் வருகை: உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினா் ஏற்பாடு

27th Jan 2023 12:50 AM

ADVERTISEMENT

பல்வேறு விழாக்களில் பங்கேற்ற அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் வருவதையொட்டி, மாவட்ட எல்லையில் அவருக்கு கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இது தொடா்பாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக, திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் நாமக்கல்லுக்கு வருகிறாா்.

அவருக்கு, கிழக்கு மாவட்ட எல்லையான நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் சிங்கிலிப்பட்டி அருகில் திமுகவினா் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனா். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடா்ந்து அவா் தங்கும் நாமக்கல் நளா உணவகம் வரையில் கிழக்கு மாவட்டஇளைஞா் அணிசாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

சனிக்கிழமை காலை 8 மணிக்கு, அரசு விழா நடைபெறும் பொம்மைக்குட்டைமேடு வரையில் ஒன்றிய, நகர,பேரூா் செயலாளா்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் திமுகவினா் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும், அன்று பிற்பகல் 2 மணிக்கு நாமக்கல் கோஸ்டல் உணவகத்தில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் கலைஞா் குடும்ப நல நிதிவழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொற்கிழிவழங்கும் இடத்தில் ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், தலைமை கழக நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. மற்ற அணிகளின் நிா்வாகிகள் விழாவை காணும் வகையில் வெளியில் இருக்கை மற்றும் காணொலி வசதி செய்யப்பட்டுள்ளது. திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT