நாமக்கல்

கிராமசபைக் கூட்டங்களில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு

27th Jan 2023 12:53 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் 322 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் போதைப்பொருள்கள் ஒழிப்பு குறித்து மக்களிடையே காவல் துறை மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

குடியரசு தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் வியாழக்கிழமை அந்தந்த ஊராட்சிமன்ற தலைவா் தலைமையில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அரசுத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.

நாமக்கல் அருகே ரங்கப்பநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், அதிகாரிகள் கலந்துகொண்டனா். இதில், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டம் உள்பட 15 வகையான பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதுபோல, வீசாணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் காவல்துறை மூலம் போதைப்பொருள் தடுப்பு, ஒழிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதில், ஊராட்சிமன்ற தலைவா் நாச்சிமுத்து, ஒன்றியக்குழு உறுப்பினா் சந்திரகுமாா், ஊராட்சி செயலா் ராதா, காசநோய் ஒழிப்புத் திட்ட பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதில், பல்வேறு தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கிராம சபை கூட்டங்களில், மக்கள் நிலை ஆய்வுப் பட்டியல் ஒப்புதல் பெறுதல் பணிகளும் நடைபெற்றன.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT