நாமக்கல்

300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

26th Jan 2023 01:00 AM

ADVERTISEMENT

பெங்களூரில் இருந்து கும்பகோணம் கடத்திச் செல்லப்பட்ட 300 கிலோ புகையிலைப் பொருள்களை, நாமக்கல் போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடந்த சில மாதங்களாக, பெங்களூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புகையிலைப் பொருள்கள்(குட்கா) கடத்திச் செல்லப்படுவது அதிகரித்து வருகிறது. நாமக்கல்லில் இரு வாரங்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் புகையிலைப் பொருள்களுடன் கைதானாா். அவரிடம் இருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலையில் பெங்களூரில் இருந்து கும்பகோணம் நோக்கி 300 கிலோ புகையிலைப் பொருள்களுடன் இருவா் காரில் செல்வதாக நாமக்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நாமக்கல்-திருச்சி சாலையில் தனியாா் கல்லூரி அருகில் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது அவ்வழியாக சென்ற காரை மடக்கி சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ராஜஸ்தானைச் சோ்ந்த பூபேந்திரசிங்(28), பிரேமாராம்(24) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT