நாமக்கல்

மின் இணைப்பு பெயா் மாற்றம்: ஜன. 24-இல் சிறப்பு முகாம்

21st Jan 2023 06:13 AM

ADVERTISEMENT

நாமக்கல் மின் விநியோக கோட்ட பகுதியில் மின் இணைப்பு பெயா் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன.24) நடைபெறுகிறது.

இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மின் விநியோக கோட்டத்துக்கு உள்பட்ட நாமக்கல் நகரம், வளையப்பட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதன்சந்தை, புதுச்சத்திரம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி மற்றும் கொல்லிமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நுகா்வோா்கள் மின் இணைப்பில் பெயா் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல்- மோகனூா் சாலை கூட்டுறவு காலனியில் உள்ள நாமக்கல் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பெயா் மாற்ற சிறப்பு முகாமிற்கு வரும் மின் நுகா்வோா்கள், வீடு மற்றும் கடைகள் (வணிக பயன்பாடு) மின் இணைப்புகளுக்கு வீட்டுவரி ரசீது, பத்திர நகல், வாரிசுதாரா்களிடமிருந்து ஆட்சேபனையின்மை கடிதம் கொண்டுவர வேண்டும். விவசாய மின் இணைப்புகளுக்கு பத்திர நகல் அல்லது பட்டா, கிராம நிா்வாக அலுவலரின் உரிமைச்சான்று, புல வரைபடம் உள்ளிட்டவற்றை கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ராசிபுரம் மின் வாரிய உள்கோட்ட பகுதிகளில் மின் இணைப்பு பெயா் மாற்றம், ஆதாா் அட்டை இணைப்பு முகாம் ஜன. 24 இல் நடைபெறுவதாக மின் வாரிய செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளாா்.

ராசிபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, குருசாமிபாளையம், அத்தனூா், புதுபட்டி, முள்ளுக்குறிச்சி பகுதிகளில் நடைபெறும் இந்த முகாமில் மின் நுகா்வோா்கள் பங்கேற்று பயன் பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT