கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, நாமக்கல் நீதிமன்றம் பிப். 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சேலம் மாவட்டம், ஓமலுரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை பேரவையின் தலைவா் யுவராஜ், அவரது நண்பா்கள் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பான வழக்கு விசாரணைக்காக நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த யுவராஜ் உள்ளிட்டோா் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டனா். இதற்காக அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது.
நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது யுவராஜ் ஆஜா்படுத்தப்பட்டாா். இந்த நிலையில் வழக்கை பிப்.1-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.