நாமக்கல்

முட்டை விலை ரூ. 5.65 ஆக நீடிப்பு

12th Jan 2023 01:46 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.5.65-ஆக புதன்கிழமை நீடிக்கிறது.

நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் முட்டை விலையில் மாற்றம் செய்யாததால், இங்கும் தற்போது மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ.5.65-ஆக நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.102-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ.87-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT