நாமக்கல்

ராசிபுரத்தில் ரூ. 65 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

DIN

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 65 லட்சத்துக்கு பருத்தி விற்பனையாயின.

ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைக் கூடத்தின் (ஆா்.சி.எம்.எஸ்.) சாா்பில், கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூா்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

இதில், ஆா்.சி.ஹெச். ரகம் குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ. 7,679-க்கும் அதிகபட்சமாக ரூ. 8,462-க்கும் விற்பனையானது. டி.சி.ஹெச். ரகம் குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ. 7,812-க்கும், அதிகபட்சமாக ரூ. 8,816-க்கும் விற்பனையானது. கொட்டு குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ. 4,960-க்கும், அதிகபட்சமாக ரூ. 6,169-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 65 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

SCROLL FOR NEXT