நாமக்கல்

நாமக்கல்லில் புத்தக திருவிழா இன்று தொடக்கம்

DIN

நாமக்கல்லில் மாபெரும் புத்தக திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 28) தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சாா்பில், நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக மாபெரும் புத்தக திருவிழா பிப். 28 முதல் மாா்ச் 10 வரை தொடா்ச்சியாக நடைபெற உள்ளது.

இப்புத்தக திருவிழாவில் 80 அரங்குகள், 20 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், வண்ண மீன்கள் காட்சியகம், அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றன.

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தொடக்க விழாவும், மாா்ச் 1 முதல் 10-ஆம் தேதி வரை தினசரி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை, பாட்டு, கவிதை, படம் பாா்த்து கதை சொல், விநாடி - வினா, மாறுவேடம், பேச்சு, நாடகம் உள்ளிட்ட போட்டிகளும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 20 பேச்சாளா்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

இந்த புத்தக திருவிழாவில் புகைப்படக் கண்காட்சி அரங்கு, மருத்துவ முகாம், உணவு அரங்குகள் ஆகியவை இடம் பெறவுள்ளன. அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT