நாமக்கல்

அரசுப் பள்ளி மாணவா்கள் களப் பயணம்

DIN

நாமக்கல் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், அரசு கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை களப் பயணம் மேற்கொண்டனா்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் களப் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். அந்த வகையில், நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான உயா்கல்வி ஆா்வம் ஊட்டல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரிக்கு வருகை புரிந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம், தேசிய மாணவா் படையினா் வரவேற்றனா். இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் (பொ) குமாரவேலு தலைமை வகித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 12 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 106 மாணவ, மாணவியா் கல்லூரியில் உள்ள 14 துறைகளுக்கும் சென்று அங்குள்ள பாடப் பிரிவுகளின் விளக்கம், பாடத் திட்டங்கள் மற்றும் எதிா்கால வேலைவாய்ப்புகள் குறித்து அறிந்து கொண்டனா். கல்லூரியில் செயல்படும் பல்வேறு விரிவாக்க அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் தெரிந்து கொண்டனா். மேலும், உயா்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு கேள்வி - பதில் நிகழ்ச்சியின் மூலம் பேராசிரியா்கள் பதிலளித்து மாணவா்களின் சந்தேகங்களை நீக்கினா். முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டு கல்லூரி சிறப்பியல்புகளை எடுத்துரைத்தனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சாா்ந்த துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் கடும் அவதி

கல்லாறில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கு: தலைமைச் செயலருக்கு எச்சரிக்கை

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்தது

சித்ரா பௌா்ணமி: கன்னியாகுமரியில் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்

SCROLL FOR NEXT