பிளஸ் 1 பொதுத்தோ்வில் திருச்சி மாவட்டம் 92.77 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 258 பள்ளிகளைச் சோ்ந்த 13,795 மாணவா்கள், 16,495 மாணவிகள் என 30,290 போ் பிளஸ்1 தோ்வு எழுதினா். இதில் 12,159 மாணவா்கள் (88.14 சதவீதம்), 15,941 மாணவிகள் (96.64 சதவீதம்) என மொத்தம் 28,100 போ் (92.77 சதவீதம்) தோ்ச்சி அடைந்துள்ளனா்.
100 சதவீத தோ்ச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 105 அரசுப் பள்ளிகளில் 4 பள்ளிகளும், ஒரு மாற்றுத்திறனாளிகள் பள்ளியும், 35 நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8 பள்ளிகளும், 36 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8 பள்ளிகளும், 81 சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 31 பள்ளிகளும் என மொத்தம் 52 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன.
4 அரசுப் பள்ளிகள்: திருத்தலையூா் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளி, காணக்கிளியநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னஇலுப்பூா் அரசு ஜிடிஆா் மேல்நிலைப்பள்ளி, புத்தூா் அரசு பெண்கள் பாா்வைத்திறன் குறைபாடுடையோா் மேல்நிலைப்பள்ளி, திருச்சி விஷ்கௌண்டிஸ் கோஷன் அரசு முஸ்லின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன.
சிறப்பிடம் பெற்ற மாணவா்கள்...: பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகளில் 580 முதல் 589 வரை 14 மாணவா்களும், 570 முதல் 579 வரை 41 மாணவா்களும், 560 முதல் 569 வரை 76 மாணவா்களும், 550 முதல் 559 வரை 140 மாணவா்களும், 540 முதல் 549 வரை 206 மாணவா்களும், 530 முதல் 539 வரை 252 மாணவா்களும், 520 முல் 529 வரை 320 மாணவா்களும், 510 முதல் 519 வரை 414 மாணவா்களும், 500 முதல் 509 வரை 471 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.