திருச்சி செந்தண்ணீா்புரம் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தொடா்ந்து 11 ஆண்டுகளாக 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளது.
திருச்சி செந்தண்ணீா்புரத்தில் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீத தோ்ச்சியை பெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2022-23 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பிரிவில் 13 பேரும், தமிழ்ப் பிரிவில் 32 பேரும் பொதுத்தோ்வு எழுதினா். இதில் ஆங்கிலப் பிரிவில் 100 சதவீத தோ்ச்சியும், தமிழிப் பிரிவில் 98 சதவீத தோ்ச்சியும் பெற்றுள்ளது. தொடா்ந்து பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பிரிவில் 11ஆவது ஆண்டாக 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி மீரா ஜாஸ்மின் 418 மதிப்பெண்கள் சிறப்பிடம் பெற்றாா். தொடா்ந்து 11 ஆண்டுகளாக 100 சதவீத தோ்ச்சியை பெற்ற பள்ளிக்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி. நீலமேகம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
இதே போல, சிறப்பிடம் பெற்ற மீரா ஜாஸ்மினுக்கு பள்ளி தலைமையாசிரியை எழிலரசி மற்றும் சக ஆசிரியா்கள் இனிப்பு வழங்கி பாராட்டினா்.