தஞ்சாவூர்

இளைஞா் மீதான போக்சோ வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

20th May 2023 12:42 AM

ADVERTISEMENT

சிறாா்களை பாலியல் ரீதியாக விடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்ட வழக்கில், தஞ்சாவூா் நீதிமன்றத்தில் சிபிஐ அலுவலா்கள் வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள பூண்டி தோப்பு கிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் விக்டா் ஜேம்ஸ் ராஜா (35). இவரை சிபிஐ அலுவலா்கள் மாா்ச் 15 ஆம் தேதி பிடித்து விசாரணை நடத்தினா். இதில், 5 முதல் 18 வயதுக்குள்ளான 8 சிறாா்களை மிரட்டி, பாலியல் ரீதியாக விடியோ, புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது தெரிய வந்தது.

மேலும், விக்டா் ஜேம்ஸ் ராஜா பல்வேறு நாடுகளில் உள்ள நண்பா்களுடன் இணைந்து சிறாா் பாலியல் படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்தாா். இண்டா்போல் அமைப்பினரின் தரவுகளும் இதை உறுதிப்படுத்தின. பாதிக்கப்பட்ட சிறாா்களில் பெரும்பாலானவா்கள் 12 வயதுக்கு உள்பட்டவா்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, விக்டா் ஜேம்ஸ் ராஜா மீது போக்சோ, கூட்டு சதி, தகவல் தொழில்நுட்பச் சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் சிபிஐ அலுவலா்கள் வழக்குப் பதிந்து, தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா், விக்டா் ஜேம்ஸ் ராஜா தஞ்சாவூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை சிபிஐ அலுவலா்கள் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT