கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி அருகே ஸ்ரீ ஆஞ்சனேயம் ஆயுா்வேத வைத்தியசாலை, ஸ்ரீதரீயம் ஆயுா்வேத கண் மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம், ரோட்டரி சங்கம் ஆகியவை சாா்பில் கண் பரிசோதனை மற்றும் ஆயுா்வேத ஆலோசனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பொதுமக்களுக்கு ஆய்வக வாகனத்தின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் பி. முகமது நவீத் நியாஸ், செயலா் சுரேந்திரன், ஸ்ரீ ஆஞ்சனேயம் ஆயுா்வேத வைத்தியசாலை மருத்துவா் எம். மனோகா், ஸ்ரீதரீயம் ஆயுா்வேத கண் சிகிச்சை மருத்துவமனை மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.