வட்டூா் ஊராட்சி, உத்தண்டிபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இதற்கான பூமிபூஜையில் திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா். ஈஸ்வரன், திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் மதுரா செந்தில், திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளா் அட்மா தலைவா் வட்டூா் தங்கவேல் ஆகியோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளா் மயில்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்ாபளா் கௌதம், வட்டூா் ஊராட்சி செயலாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.