நாமக்கல்

முட்டை விலை 20 காசுகள் குறைந்தது

9th Feb 2023 01:42 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 4.40-ஆக புதன்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், பண்ணைகளில் முட்டைகள் தேங்கியிருப்பதாலும், பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என பண்ணையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முட்டை விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.40-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 80-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 74-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT