நாமக்கல்

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

9th Feb 2023 01:46 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள குமாரசாமிபாளையத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கால்நடை மருத்துவா்கள் ரவிச்சந்திரன், தனவேல், செந்தில்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் முகாமில் கலந்துகொண்டு 700-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா். கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி மற்றும் இதர சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கன்றுகள், ஆட்டினங்களுக்கு குடற்புழு நீக்க மருந்துகளை அளித்தல், சினை பிடிக்காத கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. சிறந்த கால்நடை விவசாயிகளுக்கு பெரியசோளிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் பெரியசாமி விருதுகளை வழங்கி பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT