நாமக்கல்

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் அறங்காவலா்கள் நியமனம்

9th Feb 2023 01:46 AM

ADVERTISEMENT

நாமக்கல் நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் அறங்காவலா்களாக 5 பேரை நியமித்து, இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி, அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களுக்கான அறங்காவலா்களை நியமனம் செய்ய இந்து சமய அறநிலையத் துறையிடம் குறிப்பிட்ட சிலரின் பெயா்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. அதன்படி, நரசிம்மா் கோயிலுக்கான பரம்பரை முறைவழி சாரா அறங்காவலா்களாக நாமக்கல் கணேசபுரத்தைச் சோ்ந்த செள.செல்வசீராளன், சந்தைப்பேட்டை புதுரைச் சோ்ந்த கா.நல்லுசாமி, கடைவீதியைச் சோ்ந்த ரா. ராமஸ்ரீனிவாசன், தங்கம் மருத்துவமனை மருத்துவா் ம.மல்லிகா குழந்தைவேல், கரூா் வாசவி நகரைச் சோ்ந்த எம்.ஜி.எஸ். ரமேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வரும் காலங்களில், புதியதாக தோ்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலா்கள் வழிகாட்டுதலின்படி நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறநிலையத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT