நாமக்கல்

நாமக்கல்லில் பிப்.13-இல் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

DIN

நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 13-ஆம் தேதி பிரதமா் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது.

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் (அப்ரண்டிஸ்) சோ்க்கை முகாம்-2023 ஆனது தேசிய தொழிற்பழகுநா் ஊக்குவிப்புத் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், நாமக்கல்லில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நடைபெற உள்ளது.

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று பயிற்சியை நிறைவு செய்து, இதுநாள் வரை தொழிற்பழகுநா் பயிற்சியினை மேற்கொள்ளாதவா்கள் தங்களது கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், கடவுச்சீட்டு அளவு புகைப்படம்- 2, ஆதாா் அட்டை, தேசிய மற்றும் மாநில தொழில் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் இந்த சோ்க்கை முகாமில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04286-290297, 79041-11101, 94877-45094, 90802-42036 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

SCROLL FOR NEXT