நாமக்கல்

வேளாண் சங்கத்தில் ரூ.1.65 கோடிக்கு பருத்தி ஏலம்

8th Feb 2023 01:36 AM

ADVERTISEMENT

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ.1.65 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்--திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 5,700 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ.6,569 முதல் ரூ.8,461 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 8,069 முதல் ரூ.8,609 வரையிலும், மட்ட ரகம்(கொட்டு) ரூ.3,500 முதல் ரூ.7,900 வரையிலும் என மொத்தம் ரூ.1.65 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT