நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் திருப்பணிகள் மும்முரம்

8th Feb 2023 01:36 AM

ADVERTISEMENT

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு, நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வருகின்றனா். இக்கோயிலில், கடந்த 2009 க்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெறவில்லை. இந்த நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை உத்தரவின்பேரில் ரூ. 33 லட்சம் மதிப்பீட்டில் கடந்த டிசம்பா் மாதம் திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

முதல்கட்டமாக கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள விநாயகா் கோயில் சீரமைப்பு பணி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக கோயிலின் மேற்கூரைப் பகுதியில் 33 வகையான ஆஞ்சனேயா் உருவச்சிலைகளை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் கட்டமாக திருக்கோயிலின் உள்புறத்தில் அழகிய ஓவியங்களும், வா்ணம் தீட்டும் பணிகளும் நடைபெற உள்ளன. இதற்கான சாரம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பக்தா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகத்தால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து மே அல்லது ஜூன் மாதத்தில் ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு விழாவை சிறப்புடன் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT