நாமக்கல்

துருக்கி நிலநடுக்கத்தில் இறந்தோருக்கு அஞ்சலி

8th Feb 2023 01:36 AM

ADVERTISEMENT

துருக்கி, சிரியா நாட்டில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு, நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

துருக்கி- சிரியா நாட்டில் திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்தனா். அவா்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாமக்கல் தியாகிகள் நினைவு ஸ்தூபி முன்பு மோட்ச தீபம் ஏற்றி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ஆன்மிக இந்து சமயப் பேரவைத் தலைவா் ஏகாம்பரம், மத்திய அரசு வழக்குரைஞா் கே.மனோகரன், மைய நூலக வாசகா் வட்டத் தலைவா் திருக்குறள் ராசா, நாமக்கல் கவிஞா் சிந்தனைப் பேரவை தலைவா் டி.எம்.மோகன், கல்வியாளா் பிரணவ்குமாா், திருவிக பொது தொழிற்சங்க தலைவா் பாலுசாமி, சசிகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT