நாமக்கல்

திருநங்கையா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

8th Feb 2023 01:35 AM

ADVERTISEMENT

திருநங்கையா் தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் திருநங்கையா் விருதுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் ஏப்.15-இல் திருநங்கையா் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, 2022-23 ஆம் ஆண்டிற்கான திருநங்கையா் விருது வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, திருநங்கைகள் தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித் திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்தவராக இருக்க வேண்டும்.

இந்த திருநங்கையருக்கான விருதுடன் ரூ. ஒரு லட்சம்- காசோலை, சான்றிதழ் வழங்கப்படும். இதுதொடா்பான விவரங்களை தமிழக அரசின் விருதுகள் ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பாா்வையிடலாம். அதன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிப். 28-ஆம் தேதி வரையில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே விருதுக்கு பரிந்துரை செய்யப்படும்.

இதற்கான விதிமுறைகளாக, திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-299460 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT