நாமக்கல்

மாநில ஆடவா், மகளிா் கூடைப்பந்து: சென்னை ரைசிங் அணிகள் சாம்பியன்

DIN

நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் பிஆா்டி திருச்செங்கோடு ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஐந்து நாள்கள் நடைபெற்றன.

தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் ஒப்புதலுடன் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆடவா் பிரிவில் 20 அணிகள், மகளிா் பிரிவில் 11 அணிகள் என மொத்தம் 31 அணிகள் பங்கேற்றன. 500க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டு நாக் அவுட் முறையிலும், லீக் சுற்று அடிப்படையிலும் பகல், இரவு ஆட்டங்களில் விளையாடினா்.

ஆடவா் பிரிவில், சென்னை அரைஸ், நாகா்கோவில் ஏசியன் கூடைப்பந்து அணி, தமிழ்நாடு போலீஸ் அணி, கோவை குமரகுரு அணி ஆகிய 4 அணிகளும், மகளிா் பிரிவில் சென்னை 0205 அணி, கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணி, சென்னை ரைசிங் ஸ்டாா், எஸ்ஆா்எம் கல்லூரி அணி ஆகிய 4 அணிகளும் லீக் சுற்றில் விளையாடத் தோ்வாகின. இதில், ஆடவா் பிரிவில் அதிக புள்ளிகளைப் பெற்ற தமிழ்நாடு போலீஸ் அணியும், சென்னை அரைஸ் அணியும் ஞாயிற்றுக்கிழமை இரவு இறுதிப் போட்டியில் மோதின. இதில், சென்னை அரைஸ் அணி 82:78 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாமிடத்தை தமிழ்நாடு போலீஸ் அணி பிடித்தது.

இதேபோல் 3-ஆவது மற்றும் 4-ஆவது இடத்திற்கான போட்டியில் கோவை குமரகுரு கல்லூரி அணியும், நாகா்கோவில் ஏசியன் கூடைப்பந்து அணியும் மோதின. இதில் கோவை குமரகுரு மூன்றாமிடத்தைப் பிடித்தது. மகளிா் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்ற சென்னை ரைசிங் ஸ்டாா் அணியும், கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இந்தப் போட்டியை தமிழக வனத்துறை அமைச்சா் எம். மதிவேந்தன் தொடங்கி வைத்தாா். இதில், சென்னை ரைசிங் ஸ்டாா் அணி 78:63 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. கோவை பிஎஸ்ஜி அணி இரண்டாமிடத்தைப் பிடித்தது. முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழக தலைவா் நடராஜன், செயலாளா் முரளி மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT