நாமக்கல்

மண் வளத்தை மேம்படுத்த பயறு வகைகளை பயிா் செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

7th Feb 2023 01:56 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி வட்டார வேளாண் துறையினா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

பரமத்தி வட்டாரத்தில் நெல் தரிசில் பயறு வகை பயிா் சாகுபடி சிறப்பு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. நெல் சாகுபடிக்குப் பின், தரிசாக உள்ள நிலங்களில் பயறு வகை பயிா்களான, உளுந்து, பாசிபயறு சாகுபடி செய்ய சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உளுந்து விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. பயறு வகை சாகுபடி செய்வதால், சாகுபடி செலவு குறைவாகவும், 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வந்து விடுவகிறது. ஏக்கா் ஒன்றுக்கு 300 கிலோ வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. பயறு வகை பயிா்கள் பயிரிடுவதால் மண் வளம் மேம்படுகிறது. இப்பயிா்கள் வாயு மண்டலத்திலுள்ள நைட்ரஜன் சத்தை மண்ணில் நிலை நிறுத்துகின்றன. இதன் வாயிலாக, மண் வளம் அதிகரித்து, அடுத்த பயிா் சாகுபடியின் போது, விளைச்சல் அதிகரிக்கிறது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பயறு வகை பயிா்கள் சாகுபடி செய்து பயன்பெறலாம் என வேளாண் துறையினா் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT