நாமக்கல்

ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் பிப்.18-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

7th Feb 2023 01:52 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நா்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவா்களும் கலந்து கொண்டு பணிவாய்ப்பைப் பெறலாம்.

இம்முகாமில் பங்கேற்கும் அனைத்து வேலைநாடுநா்களும் இணையதளத்தில் அவசியமாக பதிவு செய்திருத்தல் வேண்டும். இந்த முகாம் முற்றிலும் இலவசமானது. 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன. இம்முகாம் தொடா்பான மேலும் விவரங்களுக்கு 04286-222260, 63822-92645 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT