நாமக்கல்

பரமத்தி வேலூா் அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை அமைச்சா் ஆய்வு

DIN

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த இருக்கூா் அருகே பசுங்கன்று, நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை வனத்துறை அமைச்சா் மதிவேந்தன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

இருக்கூா் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் பகுதியில் பசுங்கன்று, இரு நாய்கள், பல மயில்களை அந்தப் பகுதியில் சுற்றிவரும் சிறுத்தை வேட்டையாடி கொன்று தின்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். சிறுத்தையைப் பிடிக்க வலியுறுத்தி அப் பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். வனத்துறையினரும், பரமத்தி வேலூா் எம்எல்ஏ சேகரும் பேச்சு நடத்தி விரைவில் சிறுத்தையைப் பிடிப்பதாக உறுதியளித்தனா்.

சம்பவ இடங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி சிங்கும் சனிக்கிழமை சென்று பாா்வையிட்டாா்.

ஆட்சியரின் உத்தரவின்பேரில் நாமக்கல் வன அலுவலா் கஷ்யப் ஆா்.ஷஷாந்த் தலைமையில் நாமக்கல் வனச் சரக அலுவலா் பெருமாள் மேற்பாா்வையில் 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினா் அப் பகுதியில் முகாமிட்டு இரவு முழுவதும் ரோந்து பனியில் ஈடுபட்டு வருகின்றனா். சிறுத்தையைப் பிடிக்க அப் பகுதியில் கூண்டுகள் வைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், ட்ரோன் மூலமும் கண்காணித்து வருகின்றனா்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை:

வனத்துறையினா் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை வனத்துறை அமைச்சா் மதிவேந்தன் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ கடந்த 20 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் என்ற தகவலே இல்லை. தற்போதுதான் சிறுத்தை நடமாடுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைப் பிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்களை மாலை 6 மணிக்கு மேல் காலை 8 மணி வரை வீட்டில் இருந்து தனியாக வயல்வெளி பகுதிக்குள் செல்ல வேண்டாம்; கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட வனஅலுவலா் கஷ்யப் ஆா்.ஷஷாந்த், நாமக்கல் திமுக மேற்கு மாவட்டச் செயலாளா் மதுரா செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

SCROLL FOR NEXT