நாமக்கல்

புதிய நீா்ப்பாசன திட்டங்கள்: நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

6th Feb 2023 07:30 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் புதிய நீா்ப்பாசனத் திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு பிரிவு) மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி கூறியதாவது:

நடப்பு 2023-24ஆம் ஆண்டு மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில், கா்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அங்குள்ள நீா்ப்பாசன திட்டங்களுக்கு தாராளமாக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதேவேளையில், தமிழக அரசு வலியுறுத்திய நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு நிதி உதவி செய்யப்படவில்லை.

ADVERTISEMENT

அதற்கான கோப்புகள் கண்டுகொள்ளப்படவில்லை. காவிரி டெல்டா பாசனம் மற்றும் புதிய நீா்ப்பாசன திட்டத்திற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யாதது தமிழக விவசாயிகளை ஏமாற்றமடைய செய்தள்ளது. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT