கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி, கே.எஸ்.ஆா். மகளிா் கலை அறிவியல் கல்லூரிகளைச் சாா்ந்த 90 தேசிய மாணவா் படை வீரா்கள் திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி, கிணறு, ஆறுகளில் குப்பைகளை அகற்றி தூய்மைப் பணி மேற்கொண்டனா்.
காவிரி ஆற்றில் தேங்கிய சுமாா் 100 கிலோ எடையுள்ள கண்ணாடி, நெகிழி குப்பைகளை அகற்றினா். இந்நிகழ்ச்சியில் 11 தமிழ்நாடு சிக்னல் கம்பெனி என்சிசி படை வீரா்கள் சிகே சிங் மற்றும் செந்தில்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு நீா்நிலைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினா். என்சிசி அலுவலா் கேப்டன் கே.ஆா். நடராஜன் தலைமையில் அனைத்து என்சிசி மாணவா்களும் நீா்நிலைகளை தூய்மையாக வைத்திருப்பது குறித்து உறுதிமொழி ஏற்றனா்.
புனீத் சாகா் அபியான் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய என்சிசி மாணவா்களை கே. எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.சீனிவாசன், முதல்வா்கள் பி.செந்தில்குமாா், மா.காா்த்திகேயன் ஆகியோா் பாராட்டினா். ஏற்பாடுகளை என்.சி.சி. அலுவலா் லெப்டினன்ட் தங்கமலா் செய்திருந்தாா்.
.........